சிரியா - 1மத்திய கிழக்காசியாவின் அனைத்து சச்சரவுகளையும் உள்வாங்கி
வல்லரசுகளின் கொலைக்களமாக மாறி அடுத்து வரும் நாட்களில் உலக/மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலையே புரட்டிப்போடும் நிகழ்வுகள் ஏற்படப்போகும் பகுதியாக சிரியா தற்போது மாறியுள்ளது. பிரச்சனைக்குரிய மற்ற தேசங்களை போல இல்லாமல் பல்வேறு இன மக்கள் கொண்டவளமையான பொருளாதாரம் மற்றும் மதச்சுதந்திரம் கொண்ட நாடான இது கிட்டத்தட்ட முக்கால்வாசி அழிந்து விட்டது.


    சிரியாவின் இந்த நிலைக்கு பல காரணங்கள் உண்டு,
 • தந்தை - மகன் என்று சர்வாதிகார ஆட்சி.. 
 • அரபு/இஸ்லாமிய நாடுகளின் பனிப்போர்.. 
 • மேற்கத்திய நாடுகளின் பாரிய சதி.. என இன்னும் பல...
கடந்த நான்கரை ஆண்டுகளில் 2.5 லட்சம் அப்பாவிகளை (பெரும்பாலும் பெண்கள்குழந்தைகள்பலி வாங்கி,  90 லட்சம் மக்களை இடம்பெயர செய்துள்ள (ஐநா தரவுபடி இதில் 42 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அகதிகள்), அதிபர் அஸாத் எதிர்ப்பாளர்களின் கணக்குப்படி பலி எண்ணிக்கை 3.3லட்சம். பல துண்டுகளாக உடைந்து சிதறும் நிலையிலுள்ள இந்த நுற்றாண்டின் மிகப்பெரும் துயரம் சிரியா..சிரியா அமைந்துள்ள மத்திய கிழக்காசியாவின் சிக்கலான இஸ்லாமிய அரசியல் புரிபடாமல் சிரியாவை மட்டுமல்லபக்கத்திலுள்ள பாகிஸ்தானை கூட நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது.
பதிவின் இந்த முதல் பாகத்தில் சில குறிப்புகளையும்,  இணையத்தில்/டிவிட்டரில் கிடைத்த படங்களையும் பகிர்கிறேன்.
மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் இவை

(சன்னி - ஷியா இஸ்லாமின் இரு பெரும் முக்கிய பிரிவுகள்)

இவர்களின் போட்டியும் பூசலுமே உலகம் முழுவதும் இன்று எதிரொலிக்கிறது.இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஆறு நாடுகள் துனிஷியா (வட ஆப்ரிக்க நாடு), பக்ரைன்யேமன்எகிப்துலிபியா மற்றும் சிரியா. பல இஸ்லாமிய நாடுகளை போல இங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கிடையாது.

  • துனிஷியாவில் 2010 டிசம்பரில் 22 வருட சர்வாதிகாரி “பென் அலிக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியால் யாரும் எதிர்பாராத விதமாக 2011 ஜனவரியில் அதிபர் நாட்டை விட்டு தப்பித்து ஓடுகிறார். மக்களின் போராட்டம் வெற்றி பெறுகிறது. இது மல்லிகை புரட்சி என்று அழைக்கப்பட்டது. இடி அமினுக்கே அடைக்கலம் கொடுத்து காப்பற்றிய சவுதி அரேபியா பென் அலியையும் சேர்த்து கொண்டது. துனிஷியாவில்  ஏற்பட்ட எழுச்சி மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவியது.
  • பக்ரைனில் பெரும்பான்மை ஷியா மக்களை ஆள்வது சிறுபான்மை சன்னி பிரிவினர். 2011 ல் குட்டி நாடான பக்ரைனில் ஆளும் தரப்பிற்கு எதிரான போராட்டம் பரவிய போது சவூதி மற்றும் பிற வெளிநாட்டு கூலிப்படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டது.  இதில் நேரடியாக பாகிஸ்தானின் முன்னால் ராணுவத்தினரும்ரகசியமாக பாகிஸ்தான் படைகளும் பங்குபெற்றனர். (பாகிஸ்தான் ஒரு சன்னி முஸ்லிம் நாடு).
  • யேமனில் 1990 – 2012 வரை சவூதி அதரவு பெற்ற ”அலி அப்துல்லா சலே” (சன்னி முஸ்லிம்)அதிபராக இருந்தார். இவர் தன் பதவிக்காலத்தை காலவரையின்றி நீட்டிக்கும் வகையான சட்டதிருத்தம் மேற்கொள்ள முயல இவருக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அலி அப்துல்லா சலே” க்கு பதிலாக ”அப்ரபா மன்சூர் ஹதி” என்பவர் அதிபராக வந்தார். (இவரும் சன்னி முஸ்லிமே). இதை எதிர்த்து இரான் அதரவு பெற்ற முகமத் அலி அல் ஹௌதி (ஷியா முஸ்லிம்) என்பவர் தன் ஹௌதி இன படையின் உதவியுடன் தலைநகரை சனாவை கைப்பற்றி தன்னை தானே அதிபராக அறிவித்துக்கொண்டார். மன்சூர் ஹதி தலைநகரை விட்டு தப்பித்து கடற்கரை நகரமான *Aden ஏடனில்அடைக்கலமாகிதானே இன்னும் அதிபர் பதவியில் இருப்பதாக அறிவித்துக்கொண்டார். இவருக்கு அதரவாக ஐநா சபையின் ஒப்புதலின்றி, மற்ற சன்னி முஸ்லிம் நாடுகள் (சவூதி,ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சுடான், ஜோர்டான், கத்தார், இன்னும் சில) தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டு வீசிக்கொண்டிருக்கின்றன. விளைவுலட்சக்கணக்கில் அகதிகளும், ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியும். அங்குள்ள இந்திய மீனவர்களும் சவூதி தாக்குதலில் பலியாக ஆரம்பித்துள்ளனர்.   இந்த தாக்குதலில் பங்கேற்குமாறு சவூதியும்ஐக்கிய அரபு எமிரேட்ஸும் விடுத்த வேண்டுகோளை பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் பாராளுமன்றம் நிராகரித்து விட்டது. இதில் கடுப்பானதால் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னர்கள், சமிபத்தில் அங்கு சென்ற மோடிக்கு வழக்கத்தில் இல்லாத வரவேற்பு அளித்ததாக கூறப்படுகிறது. முதலில் தன் படையினரை யேமனில் நிறுத்தியிருந்த அமெரிக்கா, இப்போது உளவு வேலைகளை ஒருங்கிணைக்கிறது. பாகிஸ்தான் இராணுவமும் சில மறைமுக உதவி செய்வதாக தகவல்கள் உண்டு. இப்போது யேமனுக்கு இரண்டு அதிபர்கள், இரண்டு தலைநகரம். 
  • எகிப்தில் மக்கள் போராட்டத்திற்கு பணிந்து 30 வருட சர்வதிகார அதிபர் ”ஹொஸ்னி முபாரக்” பதவி விலக, தீவிரமான மத கொள்கைகளை பின்பற்றும் ”இஸ்லாமிய சகோதரத்துவம்” என்ற அமைப்பை சேர்ந்த ”முஹம்மது மோர்சி” ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (ஜுன் 2012) முதல் எகிப்து அதிபரானார்மோர்சியும் முபாரக் போல தன் அதிகாரத்தை பரவலாக்க முயலமீண்டும் மக்கள் தலைநகரில் திரண்டனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முப்படைகளின் தலைவர் ”அப்துல் அல் சிசி” ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்துக்கொண்டார். சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரட்ஸின் ஆதரவுடன் தற்போது வரை இவரே அதிபர்.
  • லிபியா 43 ஆண்டுகள் ”கடாபி” ஆட்சியின் கிழ் இருந்து வந்தது. கடாபியின் ஆட்சிக்கெதிராக உள்நாட்டு போர் மூளஅமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) படைகளின் உதவியுடன் எதிர்ப்பாளர்கள் ஆட்சியை கைப்பற்றினர். கடாபி (2011அக்டோபரில்) கொல்லப்பட்டார். இப்போது பல்வேறு இனக்குழுக்கள் சண்டையிட்டு கொள்கின்றன. முறையான அதிபர் என்று யாருமில்லை..
  • சிரியா » துருக்கிஈராக்லெபனான்ஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தேசம்...
  சிரியாவில் பெரும்பான்மை சன்னி மக்களை ஆண்டு வருவது சிறுபான்மை ஷியா பிரிவினர்.கிட்டத்தட்ட 65 % சன்னி பிரிவு, 15 % ஷியா பிரிவு முஸ்லிம்களும்,  கணிசமான எண்ணிக்கையில் கிறிஸ்துவர்கள்பாலஸ்தீனியர்கள்குர்து என இன்னும் பல இன மக்கள் நிறைந்த நாடு.
  தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிக பழமையான புராதன நகரங்களில் ஒன்று. பிரான்சிடமிருந்து 1940களில் விடுதலை பெற்றுமதசார்பற்ற நடைமுறைகளை கொண்டிருந்த அரபு குடியரசு. தற்போதைய அதிபர் அஸாத்தும் அவரது ‘பாத்’ கட்சியினரும் ஷியா முஸ்லிம்களின் Alawites என்ற உட்பிரிவை சேர்ந்தவர்கள். 1963  ஆண்டின் இராணுவ புரட்சியின் மூலம் Alawites சமூகத்தால் நடத்தப்படும் பாத் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 1971 – 2000 வரை ஹபேஸ் அல்-அஸாத்தும்2000 தொடங்கி இன்றுவரை அவர் மகன் பஷர் அல்-சாத்தும் சிரியாவின் அதிபர்கள். 
அஸாத், அவரது இங்கிலாந்து பிரஜையான மனைவி, எலிசபெத் ராணியுடன்  


இவர்களின் ஆட்சியில் பலமுறை கிளர்ச்சிகள் ஏற்பட்டு கடுமையான முறையில் அடக்கப்பட்டுள்ளன. பல அரசியல் படுகொலைகளின் மூலம் லெபனான் நாட்டு அரசியலையும் தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போதைய உள்நாட்டு போரில் அஸாத் தாக்குப்பிடிப்பதன் முக்கிய காரணம், இரானின் ஆதரவும் (இதன் உளவுப்படையின் கட்டுபாட்டில் அஸாத் வந்துவிட்டதாகவும் செய்திகள் உண்டு)ரஷ்யாவின் தங்குதடையற்ற நவீன ஆயுத விநியோகமும்.மற்றொருபுறம் சவூதிகத்தார்ஐக்கிய அரபு எமிரேட்ஸ். சாத்திற்கெதிரான நிலைபாட்டை எடுத்துள்ள இந்த நாடுகள் சன்னி தீவிரவாத அமைப்புகளான ”ISIS, அல் நுஸ்ரா (அல் காயிதாவின் சிரியா கிளை)” போன்றவற்றை வளர்த்து விட்டு பிராந்தியத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டனஇந்த நாடுகளின் ஆளும் குடும்பங்களையும், அமெரிக்க ஆயுதங்களையும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மறைய செய்து விட்டால், அடுத்த நொடி முக்கால்வாசி பிரச்சனைகள் சரியாகி விடும். இந்த ஹிட்லர் வழிதோன்றல்களை புனித பசுக்களாக காட்ட அல் ஜஸீரா (கத்தார் ) மற்றும் அல் அரேபியா (அல் ஜஸீராவின் செல்வாக்கை மட்டுப்படுத்த சவூதி ஆரம்பித்தது, இவர்களுக்குள்ளும் பூசல்கள் உண்டு) செய்தி நிறுவனங்கள் ஆளும் வர்க்கத்தால் தொடங்கப்பட்டன.எல்லாவற்றையும் இழந்து விட்ட அகதிகளை சேர்த்துக்கொள்ள கூட வேண்டாம், இடம்பெயரும் மக்களுக்கு உதவ ஐநா அகதிகள் அமைப்புக்கு இவர்கள் கொடுப்பதாக உறுதி அளித்த பணத்தை கூட இன்னும் முழுமையாக தரவில்லை.
ஆனால் ஏஜெண்டுகள் முலம் பணக்கார அரேபியர்கள் ஏழை சிரிய அகதிகளின் பெண் குழந்தைகளை நூற்றுக்கணக்கில் அடிமாடு போல வாங்கி வருகின்றனர். எதற்கென்று உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். ஈராக்கிலும்சிரியாவிலும்  ஐஎஸ்ஐஎஸ்”  பெண்களை ஏலம் விடும் செய்தியை மட்டும் தான் நீங்கள் அல் ஜஸீரா மற்றும் அல் அரேபியாவில் பார்க்க முடியும்.
அடுத்து வரும் பதிவில் முடிந்தவரை சிரியாவை பற்றிய எல்லா விவரங்களையும் தொகுக்க முயற்சி செய்கிறேன்.