மத்திய கிழக்காசியாவின் அனைத்து சச்சரவுகளையும் உள்வாங்கி,
வல்லரசுகளின் கொலைக்களமாக மாறி அடுத்து வரும் நாட்களில் உலக/மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலையே புரட்டிப்போடும் நிகழ்வுகள் ஏற்படப்போகும் பகுதியாக
சிரியா தற்போது மாறியுள்ளது. பிரச்சனைக்குரிய மற்ற தேசங்களை போல இல்லாமல் பல்வேறு இன
மக்கள் கொண்ட, வளமையான
பொருளாதாரம் மற்றும் மதச்சுதந்திரம் கொண்ட நாடான இது கிட்டத்தட்ட முக்கால்வாசி
அழிந்து விட்டது.
சிரியாவின் இந்த
நிலைக்கு பல காரணங்கள் உண்டு,
- தந்தை - மகன் என்று சர்வாதிகார
ஆட்சி..
- அரபு/இஸ்லாமிய நாடுகளின்
பனிப்போர்..
- மேற்கத்திய நாடுகளின் பாரிய
சதி.. என இன்னும்
பல...
கடந்த நான்கரை
ஆண்டுகளில் 2.5 லட்சம் அப்பாவிகளை (பெரும்பாலும்
பெண்கள், குழந்தைகள்) பலி
வாங்கி, 90 லட்சம் மக்களை இடம்பெயர செய்துள்ள (ஐநா
தரவுபடி இதில் 42 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அகதிகள்), அதிபர் அஸாத் எதிர்ப்பாளர்களின் கணக்குப்படி பலி எண்ணிக்கை 3.3லட்சம். பல
துண்டுகளாக உடைந்து சிதறும் நிலையிலுள்ள இந்த
நுற்றாண்டின் மிகப்பெரும் துயரம் சிரியா..
சிரியா
அமைந்துள்ள மத்திய கிழக்காசியாவின் சிக்கலான இஸ்லாமிய அரசியல் புரிபடாமல் சிரியாவை
மட்டுமல்ல, பக்கத்திலுள்ள
பாகிஸ்தானை கூட நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது.
பதிவின் இந்த
முதல் பாகத்தில் சில குறிப்புகளையும், இணையத்தில்/டிவிட்டரில் கிடைத்த படங்களையும்
பகிர்கிறேன்.
மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் இவை |
(சன்னி - ஷியா இஸ்லாமின் இரு பெரும் முக்கிய பிரிவுகள்) |
இவர்களின் போட்டியும் பூசலுமே உலகம் முழுவதும் இன்று எதிரொலிக்கிறது. |
இதில்
குறிப்பிடப்பட வேண்டிய ஆறு நாடுகள் துனிஷியா (வட ஆப்ரிக்க நாடு), பக்ரைன், யேமன், எகிப்து, லிபியா மற்றும்
சிரியா. பல இஸ்லாமிய
நாடுகளை போல இங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கிடையாது.
- துனிஷியாவில் 2010 டிசம்பரில் 22 வருட சர்வாதிகாரி “பென் அலி”க்கு எதிராக ஏற்பட்ட
புரட்சியால் யாரும் எதிர்பாராத விதமாக 2011 ஜனவரியில் அதிபர் நாட்டை விட்டு
தப்பித்து ஓடுகிறார். மக்களின் போராட்டம் வெற்றி பெறுகிறது. இது மல்லிகை
புரட்சி என்று அழைக்கப்பட்டது. இடி அமினுக்கே அடைக்கலம்
கொடுத்து காப்பற்றிய சவுதி அரேபியா பென் அலியையும் சேர்த்து கொண்டது.
துனிஷியாவில் ஏற்பட்ட
எழுச்சி மற்ற ஐந்து
நாடுகளுக்கும் பரவியது.
- பக்ரைனில் பெரும்பான்மை ஷியா
மக்களை ஆள்வது சிறுபான்மை சன்னி பிரிவினர். 2011 ல் குட்டி நாடான பக்ரைனில் ஆளும் தரப்பிற்கு
எதிரான போராட்டம் பரவிய போது சவூதி மற்றும் பிற வெளிநாட்டு கூலிப்படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டது. இதில் நேரடியாக பாகிஸ்தானின் முன்னால் ராணுவத்தினரும், ரகசியமாக பாகிஸ்தான் படைகளும் பங்குபெற்றனர்.
(பாகிஸ்தான் ஒரு சன்னி முஸ்லிம் நாடு).
- யேமனில் 1990 – 2012 வரை சவூதி அதரவு பெற்ற ”அலி அப்துல்லா சலே” (சன்னி முஸ்லிம்)அதிபராக இருந்தார். இவர் தன் பதவிக்காலத்தை காலவரையின்றி நீட்டிக்கும் வகையான சட்டதிருத்தம் மேற்கொள்ள முயல இவருக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. ”அலி அப்துல்லா சலே” க்கு பதிலாக ”அப்ரபா மன்சூர் ஹதி” என்பவர் அதிபராக வந்தார். (இவரும் சன்னி முஸ்லிமே). இதை எதிர்த்து இரான் அதரவு பெற்ற ”முகமத் அலி அல் ஹௌதி” (ஷியா முஸ்லிம்) என்பவர் தன் ஹௌதி இன படையின் உதவியுடன் தலைநகரை ’சனா’வை கைப்பற்றி தன்னை தானே அதிபராக அறிவித்துக்கொண்டார். ”மன்சூர் ஹதி” தலைநகரை விட்டு தப்பித்து கடற்கரை நகரமான *Aden ஏடனில்அடைக்கலமாகி, தானே இன்னும் அதிபர் பதவியில் இருப்பதாக அறிவித்துக்கொண்டார். இவருக்கு அதரவாக ஐநா சபையின் ஒப்புதலின்றி, மற்ற சன்னி முஸ்லிம் நாடுகள் (சவூதி,ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சுடான், ஜோர்டான், கத்தார், இன்னும் சில) தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டு வீசிக்கொண்டிருக்கின்றன. விளைவு: லட்சக்கணக்கில் அகதிகளும், ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியும். அங்குள்ள இந்திய மீனவர்களும் சவூதி தாக்குதலில் பலியாக ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலில் பங்கேற்குமாறு சவூதியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் விடுத்த வேண்டுகோளை பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் பாராளுமன்றம் நிராகரித்து விட்டது. இதில் கடுப்பானதால் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னர்கள், சமிபத்தில் அங்கு சென்ற மோடிக்கு வழக்கத்தில் இல்லாத வரவேற்பு அளித்ததாக கூறப்படுகிறது. முதலில் தன் படையினரை யேமனில் நிறுத்தியிருந்த அமெரிக்கா, இப்போது உளவு வேலைகளை ஒருங்கிணைக்கிறது. பாகிஸ்தான் இராணுவமும் சில மறைமுக உதவி செய்வதாக தகவல்கள் உண்டு. இப்போது யேமனுக்கு இரண்டு அதிபர்கள், இரண்டு தலைநகரம்.
- துனிஷியாவில் 2010 டிசம்பரில் 22 வருட சர்வாதிகாரி “பென் அலி”க்கு எதிராக ஏற்பட்ட
புரட்சியால் யாரும் எதிர்பாராத விதமாக 2011 ஜனவரியில் அதிபர் நாட்டை விட்டு
தப்பித்து ஓடுகிறார். மக்களின் போராட்டம் வெற்றி பெறுகிறது. இது மல்லிகை
புரட்சி என்று அழைக்கப்பட்டது. இடி அமினுக்கே அடைக்கலம்
கொடுத்து காப்பற்றிய சவுதி அரேபியா பென் அலியையும் சேர்த்து கொண்டது.
துனிஷியாவில் ஏற்பட்ட
எழுச்சி மற்ற ஐந்து
நாடுகளுக்கும் பரவியது.
- எகிப்தில் மக்கள்
போராட்டத்திற்கு பணிந்து 30 வருட சர்வதிகார அதிபர் ”ஹொஸ்னி முபாரக்” பதவி விலக, தீவிரமான மத கொள்கைகளை
பின்பற்றும் ”இஸ்லாமிய
சகோதரத்துவம்” என்ற
அமைப்பை சேர்ந்த ”முஹம்மது
மோர்சி” ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (ஜுன் 2012) முதல் எகிப்து அதிபரானார். மோர்சியும் முபாரக் போல தன்
அதிகாரத்தை பரவலாக்க முயல, மீண்டும் மக்கள் தலைநகரில் திரண்டனர். கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்தி முப்படைகளின் தலைவர் ”அப்துல் அல் சிசி” ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை
பிடித்துக்கொண்டார். சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரட்ஸின் ஆதரவுடன் தற்போது
வரை இவரே அதிபர்.
- லிபியா 43 ஆண்டுகள் ”கடாபி” ஆட்சியின் கிழ் இருந்து
வந்தது. கடாபியின் ஆட்சிக்கெதிராக உள்நாட்டு போர் மூள, அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) படைகளின் உதவியுடன்
எதிர்ப்பாளர்கள் ஆட்சியை கைப்பற்றினர். கடாபி (2011அக்டோபரில்) கொல்லப்பட்டார். இப்போது பல்வேறு இனக்குழுக்கள் சண்டையிட்டு கொள்கின்றன.
முறையான அதிபர் என்று யாருமில்லை..
- சிரியா » துருக்கி, ஈராக், லெபனான், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட
பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தேசம்...
சிரியாவில் பெரும்பான்மை சன்னி மக்களை ஆண்டு வருவது சிறுபான்மை ஷியா பிரிவினர்.கிட்டத்தட்ட 65 % சன்னி பிரிவு, 15 % ஷியா பிரிவு முஸ்லிம்களும், கணிசமான எண்ணிக்கையில் கிறிஸ்துவர்கள், பாலஸ்தீனியர்கள், குர்து என இன்னும் பல இன மக்கள் நிறைந்த நாடு.தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிக பழமையான புராதன நகரங்களில் ஒன்று. பிரான்சிடமிருந்து 1940களில் விடுதலை பெற்று, மதசார்பற்ற நடைமுறைகளை கொண்டிருந்த அரபு குடியரசு. தற்போதைய அதிபர் அஸாத்தும் அவரது ‘பாத்’ கட்சியினரும் ஷியா முஸ்லிம்களின் Alawites என்ற உட்பிரிவை சேர்ந்தவர்கள். 1963 ஆண்டின் இராணுவ புரட்சியின் மூலம் Alawites சமூகத்தால் நடத்தப்படும் பாத் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 1971 – 2000 வரை ஹபேஸ் அல்-அஸாத்தும், 2000 தொடங்கி இன்றுவரை அவர் மகன் பஷர் அல்-அசாத்தும் சிரியாவின் அதிபர்கள்.- எகிப்தில் மக்கள்
போராட்டத்திற்கு பணிந்து 30 வருட சர்வதிகார அதிபர் ”ஹொஸ்னி முபாரக்” பதவி விலக, தீவிரமான மத கொள்கைகளை
பின்பற்றும் ”இஸ்லாமிய
சகோதரத்துவம்” என்ற
அமைப்பை சேர்ந்த ”முஹம்மது
மோர்சி” ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (ஜுன் 2012) முதல் எகிப்து அதிபரானார். மோர்சியும் முபாரக் போல தன்
அதிகாரத்தை பரவலாக்க முயல, மீண்டும் மக்கள் தலைநகரில் திரண்டனர். கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்தி முப்படைகளின் தலைவர் ”அப்துல் அல் சிசி” ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை
பிடித்துக்கொண்டார். சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரட்ஸின் ஆதரவுடன் தற்போது
வரை இவரே அதிபர்.
அஸாத், அவரது
இங்கிலாந்து பிரஜையான மனைவி, எலிசபெத் ராணியுடன்
|
இவர்களின்
ஆட்சியில் பலமுறை கிளர்ச்சிகள் ஏற்பட்டு கடுமையான முறையில் அடக்கப்பட்டுள்ளன. பல
அரசியல் படுகொலைகளின் மூலம் லெபனான் நாட்டு அரசியலையும் தங்களின் முழு
கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போதைய உள்நாட்டு போரில் அஸாத் தாக்குப்பிடிப்பதன்
முக்கிய காரணம், இரானின் ஆதரவும் (இதன் உளவுப்படையின்
கட்டுபாட்டில் அஸாத் வந்துவிட்டதாகவும் செய்திகள் உண்டு), ரஷ்யாவின் தங்குதடையற்ற நவீன ஆயுத விநியோகமும்.
மற்றொருபுறம் சவூதி, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அசாத்திற்கெதிரான நிலைபாட்டை எடுத்துள்ள இந்த நாடுகள் சன்னி
தீவிரவாத அமைப்புகளான ”ISIS, அல் நுஸ்ரா (அல்
காயிதாவின் சிரியா கிளை)” போன்றவற்றை
வளர்த்து விட்டு பிராந்தியத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டன, இந்த நாடுகளின் ஆளும் குடும்பங்களையும், அமெரிக்க
ஆயுதங்களையும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மறைய செய்து விட்டால், அடுத்த
நொடி முக்கால்வாசி பிரச்சனைகள் சரியாகி விடும். இந்த ஹிட்லர் வழிதோன்றல்களை புனித
பசுக்களாக காட்ட அல் ஜஸீரா (கத்தார் ) மற்றும் அல் அரேபியா (அல் ஜஸீராவின் செல்வாக்கை மட்டுப்படுத்த
சவூதி ஆரம்பித்தது, இவர்களுக்குள்ளும் பூசல்கள் உண்டு)
செய்தி நிறுவனங்கள் ஆளும் வர்க்கத்தால் தொடங்கப்பட்டன.
எல்லாவற்றையும்
இழந்து விட்ட அகதிகளை சேர்த்துக்கொள்ள கூட வேண்டாம், இடம்பெயரும் மக்களுக்கு உதவ ஐநா அகதிகள்
அமைப்புக்கு இவர்கள் கொடுப்பதாக
உறுதி அளித்த பணத்தை கூட இன்னும் முழுமையாக தரவில்லை.
ஆனால்
ஏஜெண்டுகள் முலம் பணக்கார அரேபியர்கள் ஏழை சிரிய அகதிகளின் பெண் குழந்தைகளை நூற்றுக்கணக்கில் அடிமாடு போல வாங்கி
வருகின்றனர். எதற்கென்று உங்கள் யூகத்திற்கே விட்டு
விடுகிறேன். ஈராக்கிலும், சிரியாவிலும் ”ஐஎஸ்ஐஎஸ்” பெண்களை ஏலம் விடும் செய்தியை மட்டும் தான் நீங்கள் அல் ஜஸீரா மற்றும் அல்
அரேபியாவில் பார்க்க முடியும்.
அடுத்து வரும்
பதிவில் முடிந்தவரை சிரியாவை பற்றிய எல்லா விவரங்களையும் தொகுக்க முயற்சி செய்கிறேன்.
மிக மிக அருமையானதொரு பதிவு. அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள பல முக்கிய விஷயங்களை நேர்மையாக எழுதியுள்ளீர்கள். இக்கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வந்தால் நிறைய பேர் படிக்க வாய்ப்பு கிடைக்கும். மதத்தினால் மனிதாபிமானம் மடிந்து விட்டதா என்ற பெரும் கேள்வி எழும்பியுள்ளது.
ReplyDeleteamas32
Thank you very much..! I'm so humbled by your valuable comments.. //மதத்தினால் மனிதாபிமானம் மடிந்து விட்டதா என்ற பெரும் கேள்வி எழும்பியுள்ளது.// True... ! :(
Deleteமிக முக்கியமாக அனைவரும் படிக்கவேண்டிய பதிவு 👍
ReplyDeleteநன்றிங்க..!
Deleteவியவன்..
ReplyDeleteVery well laid out & presented;
Congrats for your striving to "understand"
& then lay it out, so that others can "understand"
சில மாதங்களுக்கு முன்பு, UNICEF மூலமாக, Ethiopia சென்றிருந்தேன்.. Child Prostitution Rescue Camp!
அப்போது, ஓரளவு, "வட ஆப்பிரிக்க" மக்களின் சூழல்-சிக்கலை அறிந்து கொள்ள முடிந்தது (எகிப்து உட்பட)
சில நாள் கட்டாய விடுமுறை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்; என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற போது..
இயேசு நாதப் பெருமான் இறுதிக் கட்ட ஊரும் & முகம்மது நபிகளின் இஸ்ரா-மீரஜ் பயண ஊருமான = ஜெருசலேம் நகருக்குக் கூட்டிப் போனார்கள்;
என் பல நாள் ஆசை= Jerusalem காணல்:)
ஆனால்... அதன் வெகு அருகில் "சிரியா":)
ஜோர்டானை ஒட்டி
பயந்து பயந்து தான் போனேன்.. போனோம்
---
ஆனால், அங்கே சென்ற பின், சக மக்களிடம் பேசிய போது தான் தெரிந்தது..
* மதம், சாதாரண மக்களிடையே..எவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளது
* அரசியல், பக்கத்து நாட்டு அரசாங்கங்களில் , எவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளது
* மதமும்-அரசியலுமே, ஒன்றோடு ஒன்று, பின்னிப் பிணைந்துள்ளது!
Temple Mount மற்றும் Al Aqsa Mosque அருகே, very high security
என்ன மதம்? என்ற விசாரிப்பு மட்டுமல்ல!
மதத்துக்குள்ளேயே, என்ன பிரிவு? என்ற விசாரிப்பு:( அதன் பின் தான் அனுமதியே!
காவலர் = அரசுப் பணியாளர் அல்லர்; மதப் பணியாளர்
அவர் விருப்பம் தான், அனுமதிப்பதும், அனுமதிக்காததும்..
ஒரு சின்ன மறுப்பு கூட, வாய்க்-கலப்பு, கைக்-கலப்பில் போய் முடிய, Plenty of Opportunities, So Volatile:(
ஏன் Shia/ Sunni என்றெல்லாம் விசாரித்து விடுகிறார்கள்?
எல்லாரும் அதே இறை, அதே மதம் தானே? என்று பிற்பாடு விசாரித்த போது தான், நீங்கள் பதிவில் சொல்லியுள்ள கதைகளை, வண்டி வண்டியாகச் சொன்னார்கள்..
//சிரியாவில் பெரும்பான்மை சன்னி மக்களை ஆண்டு வருவது சிறுபான்மை ஷியா பிரிவினர்.
Deleteகிட்டத்தட்ட 65 % சன்னி பிரிவு, 15 % ஷியா//
இது ஒரு பெருங் காரணம் என்றாலும்.. அது அரசியல் காரணம் மட்டுமே!
அதற்குள் ஊடாடி, மதவாதம் கலக்கும் தீவிரவாத இயக்கங்கள் (ISIS), வெற்றி பெறுவது எதனால்?= அண்டை நாடுகளின் அரவணைப்பு (அல்லது) கண்டு கொள்ளாமை:(
எகிப்து போன்ற நாடுகளில், சிறிது அளவேனும் ஜனநாயகம் மிஞ்சியிருந்த போது, கொஞ்சம் அடக்கமாய் இருந்த நிலை..
ஆனா, ஊழல்/ நிர்வாகச் சீர்கேடு காரணமாக, ஜனநாயக அரசுகள் விழுகின்ற போது, அந்த Vaccum, தீவிரவாத இயக்கங்கள் வந்து பற்றிக் கொள்கின்றன..
எதை நினைச்சி அழுவது?
ஊழலை நினைச்சா?
அல்லது ஊழல் அரசு விழுந்த பின், தீவிரவாதம் நினைச்சா?
இரு தலைக் கொள்ளி = நடுவில் மக்கள்:(
Shia/ Sunni Ideological Differences exist from the days after The Prophet (may peace be upon him) passed away! - Ali vs Abu Bhakr
But that idealogical differences have slowly rancoured into peoples' lives also, harbouring so much ill will against each other:(
They are totally UNMOVED, if a shia/ sunni is pushed off at the premises.
I saw it with my own eyes:(
In fact, Some people even "relish" it:((
Assuming that I was an Hindu, my local acquaintance was telling me, that he can even "tolerate" hindus, but not shias:)
He didnt know that True Tamizh is Non-Hindu, No-Religion:)
For three days, it was a very "tricky" experience..
Other places like Church of Holy Sepulchre (death station of christ) were a bit ok
---
ஓல மறைகள் என்பார் அருணகிரி..
எச் சமூகமாயினும், ஓலங்கள் பாலங்களை இடிக்கும்:(
Your last cartoon says it all..
Just 2 ways of expressing the same prayer - but "clerical doctrine" of ஓல மறை is so divisive, that it wedges people's hearts, even day-to-day life!
Thatz why, Nations of Same Religion, is NOT accepting Refugees of their own People:((((
3 lakh peoples' death in Syria
எனக்கு ஈழம் ஞாபகமும் வந்து போனது:(
But that is more race.. than same religious doctrinal difference!
ஈராக் போன்ற நாடுகளில், அவசரப்பட்டு, படைகளைத் திரும்ப அழைத்திருக்கக் கூடாதோ? என்றும் தோன்றியது
அனுப்பியதே முதல் தவறு; அனுப்பிய பின்.. சீர் ஆகாமல் நடுவில் அறுத்துப் போட்டது அதை விடப் பெரும் தவறு!
ISIS பரவ, இதுவுமொரு காரணம் அல்லவா?
*Democratic Institutions fall on corruption
*Religious Institutions rise on doctrine
*Government Institutions play policy politics between the two
*People are completely directionless:(
Sorry for the long comment!
நேராகப் பார்த்த காரணத்தால், அதை அப்படியே இங்கு எழுதத் தோன்றியது!
மனிதம் என்னும் "புரிதல்" இல்லா நிலை.. எத்துணை "மத ஞானத்தையும்" முழுங்கி விடும்!
ஓல மறைகள் ஒழியட்டும்!
அன்பு மறைகள் அரும்பட்டும்!
மூனே நாள் தான் எருசலேம்..
Deleteதிரும்பி எத்தியோப்பிய முகாம் வந்துட்டோம்..
இந்தக் "கோரம்" எல்லாம் பார்த்த காரணமோ என்னவோ.. நியூயார்க் வந்தவுடனேயே ஆளை அடிச்சிப் போட்டுப் படுக்கையில் வுழுந்துட்டேன்:)) தேறி வருகிறேன்:)
Thanku so much annaa.. Amazing and very valuable insights.. UNHCR and UNICEF are my very fav Org's, Excited to knw that u went thr via UNICEF, now U became the part of the middle east history by visiting Al-Aqsa Mosque..!
Delete///எதை நினைச்சி அழுவது?
ஊழலை நினைச்சா?
அல்லது ஊழல் அரசு விழுந்த பின், தீவிரவாதம் நினைச்சா?
இரு தலைக் கொள்ளி = நடுவில் மக்கள்/// Koduma na..
///3 lakh peoples' death in Syria
எனக்கு ஈழம் ஞாபகமும் வந்து போனது/// yes always :(
I strongly agree with ur opinion on Iraq.. »»அனுப்பியதே முதல் தவறு; அனுப்பிய பின்.. சீர் ஆகாமல் நடுவில் அறுத்துப் போட்டது அதை விடப் பெரும் தவறு!«« and this » மனிதம் என்னும் "புரிதல்" இல்லா நிலை.. எத்துணை "மத ஞானத்தையும்" முழுங்கி விடும்! :((((((((
வாழ்த்துக்கள் பிரகாஷ்…
ReplyDeleteமுதல் பாகத்திலேயே யாருக்கும் புரிபடாமலிருக்கும் இந்த பெரிய விவகாரமான சிறிய…err… சிரிய விவகாரத்தை தமிழில் விளக்கும் முயற்சியில் வெற்றி பெற்றமைக்கு.
உள் நாட்டு கலவரமா… … இல்லை …… இரு நாடுகளுக்கிடையேயான போரா… என எண்ணுமளவு உயிர் பொருட்சேதங்கள்.
இதன் பின்ணனியில் அணிவகுக்கும் செம்மறியாட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களை வகைப்படுத்தியும் விட்டீர்கள்.
இரண்டாம் பாகத்திற்காக வெயிட்டிங்… தெரியாததைப் புரிந்துகொள்ள…!
மிக்க நன்றி..! Yes i really want to explain the sectarian politics, so ppl can easily understand the ongoing conflicts.. Sikiramay rendaavthu pathivoda varen..
ReplyDeleteஅருமையா விவரமா சொல்லியிருக்கீங்க சகோ. பல புரியாத விவரங்கள் தெரிந்து கொண்டேன். இது பலருக்கும் எடுத்து சொல்ல ஏதுவாக இருக்கும்.
ReplyDeleteமத வெறியர்கள் மத த் தாலே அழிவர்.
வாழ்த்துகள்
Thanku so much for ur appreciation Anna...
DeleteExcellent writeup! thanks!
ReplyDeletehttps://twitter.com/KamalHaasanFans/status/662672747231756288
Al Aksa, Historical Write up by KamalHaasan in AnandaVikatan around 2004!
Thanku so much for ur appreciation and the link U shared.. :)
Deleteரொம்ப ஆழமா கவனித்து இருந்தால் ஒழிய இவ்வளவு தெளிவாக பதிவு போட முடியாது..ISIS ஷியா என்றே நினைச்சிருந்தேன் ..என்றேனும் இந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கக் கூடும் என்றே நினைத்தேன்..ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்ற அவநம்பிக்கை மட்டுமே கட்டுரை முடிவில் எஞ்சுகிறது :(
ReplyDeleteThanks, yes.. Middle east ippo irukka atchiyallargal thodaram varai prachanaikku mudivae kedaikaathu :(... next blog la ISIS pathi oru interesting fact solren..
ReplyDeleteஅருமையான பதிவு செய்திகளில் சிரியாவை பற்றி கேட்கும் பொழுது அதன் பின்னனி தெரியாததால் அவற்றை சரியாக உள்வாங்க முடிந்ததில்லை இனி அவற்றை கேட்கும் பொழுது உன் இந்த பதிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை தொடர்ந்த எழுத என் வாழ்த்துக்கள்.... Feeling sorry about சக மனிதன் படும் துயரங்களுக்காக
ReplyDeletethanku so much ravi.. Yes we humans failed the Humanity..
Deleteஅருமையான பதிவு, ஆனால் சவுதி அரசாங்கம் சிரிய மக்களை ஏற்காமல் இல்லை, அதை முறையாக செக் செய்துவிட்டு பதிவை சரி செய்து கொள்ளவும்.
ReplyDeleteஅருமையான பதிவு, ஆனால் சவுதி அரசாங்கம் சிரிய மக்களை ஏற்காமல் இல்லை, அதை முறையாக செக் செய்துவிட்டு பதிவை சரி செய்து கொள்ளவும்.
ReplyDeleteSorry for the delayed reply... நீங்கள் குறிப்பிடும் நபர்கள் அகதிகள் கிடையாது. போரின் காரணமாக சவுதிக்கு குடிபெயர்ந்துள்ள பணக்கார சிரிய மக்கள் அவர்கள்.
ReplyDelete