இந்தியா vs. சீனா : 2017

சீனா – பூடான் இடையேயான டோக்லாம் எல்லை பிரச்சனையில் பூடான் நாட்டின் பாதுகாப்பு, அயல் விவகார பொறுப்பாளி என்ற முறையில் இந்தியாவின் தலையீடு கண்டிப்பாக தவிர்க்க முடியாதது. வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் குறுகிய நிலப்பரப்பின் அருகிலிருக்கும் பகுதியை சீனாவிடம் விட்டுக்கொடுக்க முடியாது என்ற இன்னொரு காரணம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இந்திய படைகளை திரும்பப் பெற்று, பதிலுக்கு பூடான் துருப்புகளை நிறுத்தினால், இந்தியாவுக்கு வியூக ரீதியிலான தோல்வியாகவே கருதப்படும். 
பூடானுக்கு சீனாவுடன் டோக்லாம் தவிர வேறு பிரச்சினைகளும் உண்டு

பொதுவாக எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும் உலக நடப்புகளில் நடுநிலைபாடு, மென்மையான அணுகுமுறை எனும் இந்தியாவின் (சில்லறை புத்தியை காட்டுவதெல்லாம் இலங்கை,  நேபாள் போன்ற சின்ன நாடுகளின் விவகாரங்களில் மட்டும் தான்) போக்கு சீனாவிடம் எப்போதுமே எடுபடுவதில்லை. பிரச்சனை தொடர்பாக சீன மற்றும் பூடான் தூதரை சந்தித்த (July 8) ராகுல் காந்தியை கண்டித்து விட்டு, எதிர்க்கட்சிகளை அழைத்து நிலைமையை விளக்கவும் அரசு தவறவில்லை(July 14). நாடாளுமன்றத்தில் போர் இதற்கு தீர்வல்ல என்று (Aug 3) சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தனது செய்தி ஊடகங்கள் மூலமாக இந்தியாவை மிகக்கடுமையாக தாக்கி, உளவியல் ரீதியிலான போரை முன்னெடுத்து வரும் சீனாவால், மோடி உட்பட இந்திய  வெளியுறவு துறைக்கு பெரும் நெருக்கடியான காலகட்டம் இது.


இந்தியாவின் தலைமை பொறுப்பிற்கு 56” மோடி உட்பட யார் வந்தாலும், சீனாவுடனான Standard Operating Procedure எப்போதுமே ஒன்று தான்.


பேச்சுவார்த்தையே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்ற மோடியின் சமீபத்திய (Aug 5) உரை இதனடிப்படையில் தான். மோடியும் சீனாவிற்கு ஆத்திரமூட்டும் வகையில் இதுவரை எதுவும் செய்துவிடவில்லை. 

ஆனால் சிறிய அளவில் எல்லையில் போர் நடந்தால் கூட வர்த்தக மற்றும் உலக அரசியல் நிலைபாடுகளில் இந்தியா தன்னை விட்டு வெகுதூரம் விலகக்கூடும் என்று உணர்ந்திருந்தும் எந்த வித சமாதானத்திற்கும் உடன்படாத பெய்ஜிங், 1962 போரில் தந்ததை விட பல மடங்கு பாடம் கற்பிப்போம், இந்தியாவின் முதுகெலும்பை உடைப்போம் என்ற ரீதியில் மிக மோசமான மிரட்டல்களை விடுத்து வருகிறது.


இதை விட பெரிய எல்லை பிரச்சனைகள் பல இருக்கும் நிலையில், ஒன்றுமில்லாத இந்த டோக்லாம் விவகாரத்தை வைத்து இந்தியாவை மட்டம் தட்டி வைக்க முயலும் சீனாவிற்கு, அவர்களை பற்றிய எதிர்மறை எண்ணங்களை நம்மிடையே உருவாக்குவதாக இந்தியாவின் தனியார் செய்தி ஊடகங்கள் மீது பல காலமாக பெரும் ஆத்திரமுண்டு.


சீன போட்டியாளர் ஆட்ட விதிகளை மீறி அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்திய நிலையில், வென்ற பிறகு விஜேந்தர் சிங் பதிவிட்ட ட்விட்.
இடையில் சில இந்துத்துவ மடயர்கள் சமூக வலைத் தளங்களில் மோடி நினைத்தால் சீனாவை ஒரு நொடியில் காலி செய்து விடுவார் என்று எழுதி குவிக்க, கார்பரெட் சந்நியாசி ராம்தேவ் சீனாவிற்கு எதிராய் கச்சை கட்ட, இதில் இன்னொரு கோணமும் உண்டு; இப்பிரச்சனையில் (வர்த்தக நலன்கள், பிராந்திய அரசியல் காரணங்களுக்காக) சீனா இறங்கி வந்தால் அதை இந்தியாவில் உள்ள வலதுசாரி கட்சியினர் தங்களின் தனிப்பட்ட வெற்றியாக, அதாவது மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியென மடை மாற்றி விடுவார்கள் என்றும் பெய்ஜிங் கருத வாய்ப்புண்டு. காங்கிரசோ, பாஜக-வோ, ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை தட்டி வைப்பது, சீனாவின் ஒற்றைக் கட்சி உள்நாட்டு அரசியலுக்கு பல விதங்களில் உதவக்கூடும்.
One Belt One Road (OBORசர்ச்சைக்குரிய திட்டத்தில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டது👍 
குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மன்மோகன் சிங்கின் சீன கொள்கையை எதிர்த்து வாய் கிழிய பேசி, சகல பிரச்சனைகளுக்கும் தானே தீர்வு என்று பிரதமரான மோடிக்கு கிடைத்த மூன்று வருட காலம் என்பது இந்துத்துவ வெறியர்கள் உருவாக்கியுள்ள ‘சூப்பர்மேன் மோடி’ பிம்பத்தின் அடிப்படையில் மெய்யாகவே மிகப்பெரிய அவகாசம். ஆனால் இதுவரை குறிப்பிடும்வகையில் எந்த வியுகங்களையும் ஆளும் அரசு உருவாக்கவில்லை. (எல்லை நெடுக உள்கட்டமைப்பு வசதிகள் முன்னை விட வேகமாகவே முடுக்கி விடப்பட்டுள்ளது).

பல தொழில்களில் இன்னும் சுய சார்பு ஏற்படாத நிலையில், பெய்ஜிங்குடன் வர்த்தக ரீதியாக உறவை குறைத்துகொள்வது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

2013-ல் பதவியேற்ற பிறகு முழு இராணுவத்தையும் மிக வேகமாக நவீனமயப்படுத்தி வரும் அதிபர் ஜீ ஜின்பிங், சீன ராணுவத்தை உலகளாவிய சவாலுக்கு தயாராக அறைகூவல் விடுத்து வருகிறார்.

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ; அமெரிக்காஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக வட கொரியா என இரு அணு ஆயுத நாடுகளை வளர்த்துவிட்டு அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சீனா, தற்போதைய டோக்லாம் பகுதியில் இந்தியா முன் வைத்த சில நூறு மீட்டர் ஒருவர்க்கொருவர் பின் வாங்குதல் யோசனையையும் புறக்கணித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சுழல் உருவாகியுள்ள நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள BRICS சந்திப்பு, அதன் பிறகு நடக்க உள்ள வருடாந்திர (சீன) கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு போன்றவற்றை முன்வைத்து சீனா நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க சிறிது வாய்ப்புள்ளது.

டோக்லாம் பிரச்சனை குறித்து மேலும் தெரிந்து கொள்ள https://nyti.ms/2tK8RO8  
* 1962 போர் குறித்த எனது முந்தைய பதிவு http://f5here.blogspot.in/2012/


1 comment:

  1. அருமை. நீங்க சொன்னது உண்மை. தலைமையை அடுத்த டெர்ம்ஸ் க்கும் தக்க வைத்துக்கொள்ள, உள்நாட்டில உள்ள வெறுப்பை திசைதிருப்ப, சைனா தலைமை இப்போ பூச்சாண்டி காட்டுவது ஒரு தற்காலிகமே. நம் பூட்டானோடு மட்டுமல்ல, இதுபோல மற்ற அருகிலுள்ள சிறு நாடுகளையும் அப்பப்ப சீண்டி வருவது சீனாவுக்கு வாடிக்கை. ஒரு அட்டன்சன் சீக்கிங். அப்படியே போர் என்று வந்தால் அது மிக பெரிதாக இருக்காது. நமக்குள்ள ஒரே நன்மை வான்வலி தாக்குதல். விமானத்தளங்கள் நமக்கு அருகருகே இருப்பதுபோல் சீனாவுக்கு இல்லை. அவர்களின் விமானங்களுக்கு reFuel செய்யவதற்கு சிரமம். நம் காலாட்படை முன்னேறுவதற்கு முன்பே நமது Air Strike அவர்களின் காலாட்படையை தகர்த்துவிடும் என்பதே உண்மை. வாழ்த்துக்கள் இது விஷயமாக மேலும் பல தகவல்களுக்கு ஒரு இமெயில் அனுப்பியுள்ளேன். பொறுமையாக படித்து பார்க்கவும். வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete